சுலபமாக வாக்ஸிங் செய்ய சில வழிகள்

Loading...

சுலபமாக வாக்ஸிங் செய்ய சில வழிகள்!உடலில் தேவையில்லாத முடிகளை நீக்க கெமிக்கல் வாக்ஸிங் என்பது ஒரு வழி. அதுமட்டுமே வழியல்ல. இயற்கையான பொருட்களை வைத்தே வாக்ஸிங் செய்யலாம். நாம் பாட்டியும், அம்மாவும் கூட பயன்படுத்திய பொருட்கள்தான் இவை. பெண்களே வீட்டிலிலேயே உங்கள் பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

கஸ்தூரி மஞ்சள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தாலே முடி வளர்வதை தடுக்கலாம்.
வேப்பிலை வெந்நீரில் போட்டு குளித்து வந்தாலும் முடி வளர்ச்சி கட்டுக்குள் இருக்கும்.
வேப்பங்குச்சியை எரித்து அதன் சாம்பலை உடம்பில் பூசி குளித்து வந்தாலும் முடி வளர்வது குறைவாக இருக்கும்.
கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், கார்போக அரிசி, கோஷ்டம் வேர், விளாமிச்சை வேர், ரோஜா இதழ், செண்பகமொட்டு இவைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து 250 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். இத்துடன் 250 கிராம் பயத்தம் பயிரையும் அரைத்து ஒன்றாய் கலந்து குளியல் பொடியாக தயார் செய்து கொள்ளவும்.
குளிப்பதற்கு முன்னர் உடலில் எண்ணெய் தடவி கொண்டு பின்னர் கஸ்தூரி மஞ்சள் மற்றும் பாத் பவுடரை தேய்த்து குளித்து வந்தால் சரும வறட்சி ஏற்படாது. முடி வளர்ச்சியும் கட்டுப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply