சீரக ரைஸ்

Loading...

சீரக ரைஸ்
தேவையானவை:
அரிசி – ஒரு கப், பூண்டு – 15 பல், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த முந்திரிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மோர் மிளகாய் வற்றல் – 4, எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசியை உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யை அதில் சேர்க்கவும். பூண்டினை தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கி… சிறிதளவு நெய்யில் இளஞ்சிவப்பாக வதக்கவும். மீதமுள்ள நெய்யில் மிளகு, சீரகத்தை வறுத்து கொரகொரப்பாக பொடி செய்யவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு மோர் மிளகாய் வற்றலை கருமையாக வறுத்து ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தில் உப்பு சேர்த்து, முந்திரிப் பொடி, மிளகு – சீரகப் பொடி, பூண்டு, மோர் மிளகாய் வற்றல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply