சீன பயணிகள் விமானத்தில் Wi – Fi சேவை

Loading...

சீன பயணிகள் விமானத்தில் Wi – Fi சேவைஏர் சைனா என்ற சீன அரசின் விமானத்தில் இனி பயணம் செய்வோர், விமானத்தின் உள்ளாகவே, வை-பி சேவை யினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெறலாம். விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்வரை இந்த வசதி கிடைக்கும் எனப் பல சோதனைகளுக்குப் பின்னர், ஏர் சைனா நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில், சென்ற ஏப்ரல் 16 அன்று, தன் விமானத்தில் பயணித்தவர்களுக்கு, சோதனை முயற்சியாக இந்த சேவையை வழங்கியது. அப்போது, பயணிகள், தங்கள் சொந்த கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெற்றனர்.

விமானத்தின் கேபினில் உள்ள சாதனத்துடன் வை-பி இணைப்பினைப் பெற்று, பின் அதன் வழியாகத் தங்கள் சாதனங்கள் மூலம் இணைய இணைப்பினைப் பயணிகள் பெற்றனர். இணைய தேடல், ஆன்லைன் மெசேஜ், ஒன்லைன் வீடியோ, வீடியோ அழைப்புகள் மற்றும் மின் அஞ்சல்கள் பயன்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மொபைல் போன் வழி இணைய இணைப்பிற்கு அனுமதி தரப்படவில்லை. அத்துடன், விமானம் பயணிக்கத் தொடங்கும்போது, இணைய வசதிக்கு அனுமதி தரப்படவில்லை.

விநாடிக்கு 30 மெகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தினை இந்த விமானப் பயணத்தின் போது மேற்கொள்ள முடிந்ததாக, பயணிகள் தெரிவித்தனர். இந்த சேவையினை இன்னும் பல விமானப் பயணங்களில் மேற்கொள்ள இருப்பதாக, இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இலவசமாகவே இந்த சேவை வழங்கப்படுகிறது.

இந்த வை-பி சேவை, தரை தொலை தொடர்பு மையத்துடன் 4ஜி அலைவரிசையில் இயங்கும் Airto Ground என்னும் நெட்வொர்க் மூலமாக வழங்கப்படுகிறது. ZTE கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த நெட்வொர்க் இணைப்பினை வழங்குகிறது. ZTE கார்ப்பரேஷன் இதற்கென, கோகோ (Gogo) நிறுவனத்தின் துணைப் பிரிவான ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுகிறது.

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இயங்கும் லுப்தான்ஸா ஏர்லைன்ஸ், பல ஆண்டுகளாகவே, இந்த இணைய சேவையினைத் தன் விமானங்களில் பயணிப்பவர்களுக்குக் கட்டணம் பெற்றுக் கொண்டு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply