சீன அரசு வெளியிடும் கம்ப்யூட்டர் ஓ.எஸ்

Loading...

சீன அரசு வெளியிடும் கம்ப்யூட்டர் ஓ.எஸ்மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி நீட்சிக்கான தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதனால், சீன அரசு தன் அலுவலகங்களில், விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தக் கூடாது என ஆணையிட்டது.

தற்போது தானே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வரும் அக்டோபரில் வெளியிட உள்ளது. முதலில் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், பின்னர் படிப்படியாக ஸ்மார்ட் போன்களிலும் இது பயன்படுத்தப்படும் வகையில் தரப்படும். இந்த தகவலை, அரசின் செய்தி தகவல் தொடர்பு முகமையான Xinhua தெரிவித்துள்ளது.

படிப்படியாக, வெளிநாட்டு நிறுவனங்களின் எந்த சிஸ்டமும் சீன தகவல் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. மொபைல் சாதனங்களில் கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் இதே முறையில் நீக்கப்படும்.

தேசிய அளவில் தனக்கென மட்டும் பயன்படுத்தும் வகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தயாரிக்க சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 2000 ஆண்டில், Red Flag Linux என்ற பெயரில் ஓ.எஸ். ஒன்றை வடிவமைத்து, அப்போதைய விண்டோஸ் 2000க்குப் பதிலாக சீனா கொண்டு வந்தது.

Red Flag Software என்னும் நிறுவனம், முழுக்க அரசு நிதியுதவியுடன் இதனை வடிவமைத்தது. ஆனால், அந்நிறுவனம் மூடப்பட்டதால், அந்த திட்டம் தோல்வியைத் தழுவியது. அந்நிறுவனத்தை Penta Wan Jing Information Technology என்ற நிறுவனம் வாங்கியது. அநேகமாக, அந்த சிஸ்டத்தினையே, மீண்டும் புதிய முறையில் வடிவமைக்கும் முயற்சியில் புதிய நிறுவனம் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply