சிக்கன் மக்ரோனி

Loading...

சிக்கன் மக்ரோனி
தேவையான பொருட்கள்:

மக்ரோனி – 150 கிராம்
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சைமிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 3 டீ ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு(வாசனைத்தூள்) – 1/2 டீ ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் – 1 டீ ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 4 டீ ஸ்பூன்


செய்முறை:

* மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்­ணீர் வடித்துக்கொள்ளவும்.

* வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.

* பின்னர் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.

* அதில் தக்காளி, பின்னர் எல்லாத்தூள்களையும் தயிர் சேர்த்து வதக்கவும்.

* எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.

* சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும்.


குறிப்பு:

* மக்ரோனியில் உப்பு சேர்த்திருப்பதால் சிக்கனில் தேவைக்கு மட்டும் சேர்க்கவும். விருப்பப்பட்டால் பொடிதாக நறுக்கிய வெங்காயத் தாள் சேர்த்து பரிமாறலாம்.

* மட்டனுக்கும் இதே செய்முறை தான். ஆனால் குக்கரில் மட்டனை அவிக்க வேண்டும். விருப்பப்பட்டால் புதினா, கொத்தமல்லி சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply