சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை

Loading...

சர்க்கரை நோயாளிக்கும் சக்தி தரும் பேரீச்சை`ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து’ என்கிற அளவில் தானே பேரீச்சை பற்றி உங்களுக்கு தெரியும்! பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமில்லை.. வைட்டமின் ஏ, சுண்ணாம் புச்சத்தும் நிறைந்துள்ளது.

தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சைம்பழம் சாப்பிட்டு வந்தால், இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சைபழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளை தவிர்க்கும் சர்க்கரை நோயாளிக்கூட தாராளமாக பேரீச்சம்பழம் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு டம்ளர் பாலுடன் 1 (அ) 2 பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர, உடல் வலிமை பெறும்.

காச நோயாளிகள் தினமும் 4 பேரீச்சம் பழம் சாப்பிட்டுவர, எலும்புகள் பலன் பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எதிர்பாராத சில சம்பவங்களால் அதிகமான ரத்தத்தை இழந்தவர்கள், தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த இழப்பை விரைவில் ஈடு செய்யலாம்.

வெண் குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சிரப் குடிக்கலாம். இது ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

பேரீச்சம்பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply