சரும வறட்சியை போக்கும் கசகசா | Tamil Serial Today Org

சரும வறட்சியை போக்கும் கசகசா

Loading...

சரும வறட்சியை போக்கும் கசகசாநாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, `மெனோபாஸ்’ சமயத்தில் (மாதவிடாய் நிற்கும் போது) ஈஸ்ட்ரோஜன் சுரப்புக் குறைவதால், உடலில் பல மாற்றங்கள் நிகழும், உடலின் கொழுப்புச்சத்து குறைவதால், சருமத்தில் எண்ணெய் பசையே இல்லாமல் வறண்ட பாலைவனமாகிவிடும்.

மேலும் `கொலஸ்ட்ரால் வருமோ’ என்ற பயத்தில் உணவிலும் எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே ஒதுக்கிவிடுவதும் வறட்சிக்கு வழிவகுக்கும். இதனால், தோலில் சுருக்கம் அதிகமாகி, கூடுதலான வயோதிக தோற்றம் வந்துவிடும். இந்த வறட்சியினால் கண்கள், கன்னம், கை, கால், முழங்கைப் பகுதிகள் சுருங்கி, தோல் தொய்ந்து விடும். உணவு மற்றும் சருமப் பராமரிப்பு மூலமும் சருமத்தைப் பளபளப்பாக மாற்ற முடியும்.

* கும்மென்று இருந்த கன்னம், வயோதிகம் காரணமாக ரொம்பவே தளர்ந்து விடும். இதற்கு, தினமும் 4 பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். இரவில் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் கசகசா தூளைக் கலந்து குடித்து வரலாம். மனநிம்மதியான உறக்கத்துடன் சருமமும் மிருதுவாக மாறும்.

* கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, இளமை அழகு கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும் போது… தலா 25 கிராம் கசகசா வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம் பருப்பை சேர்த்து அரையுங்கள், அந்த விழுதை, கால் கிலோ நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இந்த எண்ணெயை உடம்பில் தினமும் தடவினால், இழந்த பொலிவு மீண்டும் வந்துவிடும். தோலில் அரிப்பு இருந்தால், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

* வைட்டமின் ஈ, குறைபாட்டினால், கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய்ப் பசை இல்லாமல் பொரிப் பொரியாக தோன்றி, கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் ஏற்படலாம். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பியூட்டி பார்லரில் த்ரெட்டிங் செய்து கொள்வதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். இல்லையென்றால்… கண் அழகு மட்டுமல்ல. பார்வையும் கூட பாதிக்கப்படலாம்.

* பனிக்காலத்தில் வறண்ட சருமம் மேலும் வறட்சிப் பாதையில் போய், உள்ளங்கையில் சொர சொரப்பு, பாதங்களில் வெடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. தினமும், இரவு தூங்கப்போகும் போது கை, கால்களை நன்றாகக் கழுவி விட்டு, ஸ்டாக்கிங் டைப் சாக்ஸ் அணிந்து கொள்வது தோலை மென்மையாக வைத்திருக்க உதவும்.

பொரியல், கூட்டு, சாம்பார் உணவு வகைகளில் கசகசாவை சேர்த்துக் கொள்வதும் சருமத்தின் எண்ணெய்ப் பசையைக் கூட்டும். 50 கிராம் கசகசாவை வறுத்து, சம அளவு சர்க்கரையுடன் 25 கிராம் பாதாம் பருப்பையும் சேர்த்து பொடியுங்கள். ஒரு கப் பாலில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கலந்து குடித்து வர ஒட்டுமொத்த சரும வறட்சியும் சட்டென மறையும்.

Loading...
Rates : 0
VTST BN