சரும பளபளப்புக்கு சப்போட்டா

Loading...

சரும பளபளப்புக்கு சப்போட்டாநமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் செய்வதில் முதன்மையானது சப்போட்டா. அதிக ஈரப்பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்கலாம்.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு, புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா. தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டிஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப் பூசுங்கள், சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன் பூசினாற்போலவும் காட்டும்.

ஒட்டிய கன்னங்கள், மொழுமொழுவென பிரகாசிக்க வேண்டுமா? சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ்பூன் சந்தனப் பவுடர் கலந்து கிரீம்போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை பூசுங்கள்.

தடவிக் கொண்டிருக்கும் போதே இந்தப் பேஸ்ட் உலர்ந்து விடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேய்த்து விடுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவென மின்னுமே கன்னம்!

எனக்கு ஆப்பிள் கன்னம் தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே… என்று குறைப்பட்டுக் கொள்வோர், ஒரு டீஸ்பூன் கனிந்த சப்போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலைமாவு கலந்த முகத்தில் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் ப்ளீச் செய்தது போல முகம் பளிக்சென்று இருக்கும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி குளியுங்கள், தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply