சருமத்தின் அழகை அதிகரிக்க சில அழகு குறிப்புகள்

Loading...

சருமத்தின் அழகை அதிகரிக்க சில அழகு குறிப்புகள்சருமத்தின் அழகை அதிகரிப்பதற்கு எத்தனை முறைகள் வந்தாலும், இன்னும் பல இயற்கை வழிமுறைகளைத் தான் நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம்.

அதிலும் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் அசுத்தமான சுற்றுச்சூழலால், உடல் நலம் மட்டுமின்றி, சருமத்தின் அழகும் தான் பாதிக்கப்படுகிறது. பொதுவாக மிகவும் பிரபலமான ஆன்மீக தலைவரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வைத்திருப்பார்.

அந்த வகையில் அவரிடம் சருமத்தின் அழகை அதிகரிப்பதற்கான ஒருசில தீர்வுகளும் உள்ளன. அவற்றை பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல அழகான மற்றும் பொலிவான சருமத்தைப் பெறலாம்.


பிரஷ் ஜூஸ்

பாபா ராம்தேவ் அவர்கள் சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமானால், கார்போனேட்டட் பானங்களான பெப்சி, கொகோ கோலா போன்றவற்றை அறவே தவிர்த்து, பழங்களைக் கொண்டு செய்யப்படும் பிரஷ் ஜூஸ்களை குடிக்குமாறு கூறுகிறார்.

இதனை செய்து வர தானாவே சருமம் பொலிவாகும் என்றும் சொல்கிறார்.முகத்தை தேய்க்கவும் தினமும் குளித்த பின்னர், மென்மையான துணியைக் கொண்டு 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும் வரை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமமானது இறுக்கமடைந்து, சருமம் இன்னும் மென்மையாகும்.


நேர்மறையான எண்ணங்கள்

எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் இருந்தால், மனமானது சந்தோஷமாகவும், எவ்வித அழுத்தமின்றியும் இருக்கும். இப்படி மனமானது சந்தோஷமாக இருந்தால், முகம் தானாகவே பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கும்.


கற்றாழை

கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு முகம், கழுத்து மற்றும் கைகளை, தினமும் காலை மற்றும் இரவில் மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தின் அழகு கூடும் என்று பாபா ராம்தேவ் சொல்கிறார்.


கடலை மாவு

பேக் பாபா ராம்தேவ், எப்போதும் இயற்கை மற்றும் ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு தான் சருமத்தைப் பராமரிக்க வேண்டும் என்று சொல்கிறார். அதிலும் இந்த பொருளைக் கொண்டு இரண்டு வழிகளில் சருமத்தைப் பராமரிக்கலாம் என்றும் சொல்கிறார்.

அதில் ஒரு வழி, தினமும் கடலை மாவு கொண்டு முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். மற்றொன்று கடலை மாவை ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், 1-2 வாரத்தில் நல்ல பலன் தெரியும் என்றும் கூறுகிறார்.


எலுமிச்சை பாபாஜி

சருமத்தின் அழகை அதிகரிக்கப் பரிந்துரைப்பதில் ஒன்று தான் எலுமிச்சையை பயன்படுத்துவது. அதற்கு எலுமிச்சை துண்டைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் பிம்பிள் மற்றும் வெயிலினால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்கலாம்.


பச்சை பால்

தினமும் இரவில் படுக்கும் முன், பச்சை பாலைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுத்து, நீரில் கழுவாமல், இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் எழுந்து குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமத்தின் நிறம் அதிகரித்து அழகாகக் காணப்படும்.


தண்ணீர் குடிக்கவும்

பாபாஜி கூட சருமத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமானால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார். எனவே தண்ணீரை குடியுங்கள்.


நல்ல தூக்கம்

சருமத்தின் அழகு மற்றும் பொலிவு அதிகரிக்க விரும்பினால், நல்ல தூக்கம் வேண்டும் என்று பாபா ராம்தேவ் சொல்கிறார். அதிலும் தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கி, காலையில் ஒரே நேரத்தில் எழ வேண்டும் என்றும் சொல்கிறார். இதனால் தானாகவே சருமத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுத்து, அழகுடன் ஜொலிக்கலாம் என்றும் சொல்கிறார்.

இங்கு யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் சருமத்தின் அழகை அதிகரிப்பதற்கு சொல்லும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றினால், தற்காலிகமாக மட்டும் அழகு பெறாமல், எந்த பக்க விளைவும் இல்லாமல் நிரந்தரமாக அழகுடன் திகழலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply