சம்சுங்கின் ChatON சேவை தொடர்பில் அதிரடி அறிவிப்பு

Loading...

சம்சுங்கின் ChatON சேவை தொடர்பில் அதிரடி அறிவிப்புசம்சுங் நிறுவனம் வழங்கி வரும் ChatON குறுஞ்செய்தி சேவையில் மேலும் பல புதிய வசதிகளை அதிரடியாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி சாதாரண கணனிகள் உட்பட Android, iOS, BlackBerry, Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களுக்காக புதிதாக வெளியிடப்பட்டுள்ள ChatON 3.5 பதிப்பில் இப்புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்புதிய வசதிகளுள் 1 GB வரையான கோப்புக்களை பரிமாறிக்கொள்ள முடிதல் மற்றும் முன்னர் இருந்த 200 வரையானவர்களுடன் சட் செய்யக்கூடிய வசதி தற்போது 1001 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களால் படிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீளவும் பெற்றுக்கொள்ளல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் அரபிக், துருக்கிஷ், ஹிந்தி, பார்ஷி ஆகிய மொழிகளில் இந்த அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply