சப்பாத்தி உப்புமா

Loading...

சப்பாத்தி உப்புமா
தேவையானவை:
சப்பாத்தி – 4, வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:
சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் கிளறி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு: காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply