கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகள்

Loading...

கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகள்அனைத்து மாமிச உணவுகளிலும் கொழுப்பு அதிகமாக காணப்படுகிறது. மீன், ஆட்டு இறைச்சி, பிற இறைச்சி வகைகள், முட்டைமஞ்சள் கரு, மீன் எண்ணெய், கல்லீரல் ஆகிய உணவுகளில் கொழுப்பு சத்து மிகுதியாக காணப்படுகிறது.

விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பில் கொழுப்பு அமிலங்கள் போதுமானதாக இருப்பதில்லை. ஆனால் அதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆகியவை மிகுதியாக இருக்கின்றன.

தாவர உணவுகள்:சோயா பீன்ஸ், முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, பாதாம் பருப்பு ஆகிய தாவர உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலான எண்ணெய் வித்துகளிலும் கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது.

சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் ஆகியவைகளிலும் கொழுப்பு சத்து நிறைந்திருக்கிறது. வனஸ்பதி, டால்டா, வெண்ணெய், பால், நெய் ஆகியவற்றிலும் கொழுப்புச் சத்து மிகுதியாக இருப்பினும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி ஆகியவை இல்லை.

தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ளது பழங்களில் அலிப்பேரை(Avocado)யில் கொழுப்புசத்து அதிகமாக உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply