கொத்தவரங்காய் பச்சடி

Loading...

கொத்தவரங்காய் பச்சடி

தேவையானவை:
துவரம்பருப்பு – அரை கப், கொத்தவரங்காய் – 100 கிராம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – அரை டீஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவைக்கு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:
துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவையுங்கள். கொத்தவரங்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, கொத்தவரங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்குங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொத்தவரங்காயில் ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் குக்கரில் போட்டு மூடி, ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து திறந்து, வேகவைத்த பருப்பை சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சாப்பிட்டுப் பாருங்கள்… ‘கொத்தவரங்காயில் இப்படி ஒரு பச்சடியா?’ என்று வியப்பீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply