கொத்தமல்லி வடை

Loading...

கொத்தமல்லி வடை
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப் கொத்தமல்லி – 1 கட்டு (நறுக்கியது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது) உப்பு – தேவையான அளவு மாங்காய் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/2 கப் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மாங்காய் தூள், மிளகாய் தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரித்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி வடை ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply