கேரட் போண்டா

Loading...

கேரட் போண்டா
தேவையான பொருட்கள்:

கேரட் – 1 (பெரியது மற்றும் துருவியது) உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன் மைதா – 1 கப் பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு
செய்முறை:

முதலில் உலர் திராட்சையை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, அத்துடன் உலர் திராட்சையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியான பதத்தில் கலந்து கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கேரட் போண்டா ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply