கூகுள் நிறுவனம் ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவிப்பு

Loading...

கூகுள் நிறுவனம் ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவிப்புகூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிறுவனங்களின் வளர்ச்சியால் ஆர்குட்டின் வளர்ச்சி தடைபட்டதால் ஆர்குட்டின் சேவையை நிறுத்தி கொள்ளும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு ஆர்குட் சேவை தொடங்கப்பட்டது. அதே வருடம் பேஸ்புக் நிறுவனமும் தொடங்கப்பட்டது. பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது 128 கோடி பயன்பாட்டாளர்களுடன் உலகின் பெரிய சமூக வலைதளமாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை கூகுள் நிறுவனம் தொடங்கியது.

அதன்பின் பிற சேவைகளுக்கும் அதன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. பேஸ்புக் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் தொடக்கத்தில் இருந்தே தன்னை நிலை நிறுத்தி கொண்டது கூகுள் பிளஸ். அதனையடுத்து கடந்த சில வருடங்களில் ஒருங்கிணைந்த பயன்பாட்டாளர் அடையாள முறை கொண்டதாக கூகுள் பிளஸ் வளர்ச்சி அடைந்து நிலை நிறுத்தி கொள்ளப்பட்டது.

காம்ஸ்கோர் ஆய்வு நிறுவனத்தின்படி, கடந்த 2010ம் வருடம் ஆர்குட்டை இந்திய அளவில் பேஸ்புக் முந்தியது. அதன் வருகையாளர்கள் 2.09 கோடியாக அதே வருடத்தின் ஜூலையில் அதிகரித்தனர். இது ஆர்குட் நிறுவனத்தின் 16 சதவீத வளர்ச்சி நிலையில் 1.99 கோடி வருகையாளர்கள் என்ற நிலைப்பாட்டை காட்டிலும் அதிகமானது.

ஆர்குட் பயன்பாட்டாளர்கள் அனைவரது பதிவுகளும் பாதுகாக்கப்பட்டு அவை இன்று முதல் (செப்டம்பர் 30) கிடைக்க கூடிய வகையில் செயல்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply