கூகுள் கிளாஸின் புதிய பதிப்பு விரைவில் அறிமுகம்

Loading...

கூகுள் கிளாஸின் புதிய பதிப்பு விரைவில் அறிமுகம்கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் எனும் சாதனத்தை உருவாக்கி தொழில்நுட்ப உலகில் பாரிய புரட்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தது.

பல அம்சங்களை ஒருங்கே கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த இச்சாதனம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் விற்பனை வரையறுக்கப்பட்டே இருந்தது.

இந்நிலையில் விரைவில் கூகுள் கிளாஸின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இத்தாலியை சேர்ந்த பிரபல கண்ணாடி விற்பனை நிலையமான Luxottica இன் தலைமை அதிகாரி Massimo Vian தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது பாவனையிலுள்ள கூகுள் கிளாஸினை தொடர்ந்தும் உற்பத்தி செய்வதினை கடந்த ஜனவரி மாதம் முதல் கூகுள் நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply