குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வர காரணம் என்ன பெற்றோர்களின் பதற்றத்தைக் குறைக்க

Loading...

குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வர காரணம் என்ன பெற்றோர்களின் பதற்றத்தைக் குறைக்கசில குழந்தைகள் உடல்நலமில்லாத நேரத்தில் வலிப்பு வந்ததும் பெற்றோர் ஒரேயடியாக பயந்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு வலிப்பு என்பது அதிகமான காய்ச்சலில்தான் பொதுவாக வரும்.

இந்த வலிப்பு வரக் காரணம் சோடியம், பொட்டாஷியம், மெக்னீஷியம், கால்சியம் போன்ற தாது உப்புகள் உடலில் உடனடியாக குறைவதுதான். மேலும் ரத்த அழுத்தம் அதிகமாதல், சிறுநீரக பாதிப்பு மற்றும் குடும்பப் பாரம்பரியம் ஆகிய காரணங்களினாலும் வலிப்பு நோய் வரக்கூடும். என்றாலும் பெரும்பாலும் வலிப்பு வரக் காரணம் அதிக காய்ச்சல்தான்.

இந்த வகை வலிப்பை ‘சிம்பிள் ஃபைப்ரைஸ் ஃபிட்ஸ்’ என்கிறார்கள் குழந்தை நல மருத்துவர்கள்.

மேலும், ‘ஆறு மாதங்களிலிருந்து மூன்று வயது இந்த வலிப்பு வரக்கூடும். ஜுரம் வந்த 24 மணி நேரங்களுக்குள் இந்த வலிப்பு வரும். ஒருமுறை வரும் காய்ச்சலுக்கு ஒருமுறைதான் வலிப்பு வரும். ஜுரத்தைக் குறைப்பதுதான் நாம் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை. ஏதோ நோய் தொற்றி இருக்கிறது என்பதற்கான அடையாள குறிப்புதான் ஜுரம்.

‘பாரசிடமால்’ மருந்தைக் கொடுக்கலாம். அப்படி கொடுப்பதற்கு ஒரு அளவு உண்டு. குழந்தைக்கு எத்தனை வயதோ அத்தனை ஸ்பூன் மருந்து கொடுக்க வேண்டும். ஆனால், அதிகபட்சம் இரண்டரை ஸ்பூன்கள்தான் கொடுக்க வேண்டும். சட்டையைக் கழற்றிவிட்டு குழந்தையை ஓடும் மின்விசிறி அடியிலோ, குளிர்ந்த அறையிலோ படுக்க வைக்கலாம். வெதுவெதுப்பா சூடு கொண்ட நீரினால் உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். சிலர் ஐஸ் நீரில் ஒத்தடம் கொடுப்பார்கள். இது சரியல்ல. குழந்தையை இது அசௌகரியத்துக்கு உள்ளாக்கும். தாய்ப்பாலை துணியில் நனைத்து நெற்றில் வைத்தால் காய்ச்சல் இறங்குமென்பார்கள். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

இதுபோன்ற வலிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன் வயதையொட்டிய மற்றக் குழந்தைகளைவிட அதிக புத்திசாலித்தனத்துடன் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை வலிப்பினால் உயிருக்கு ஆபத்தில்லை. நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் வேண்டாம். ஆனால், ஒரே வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த வகை வலிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நான்கில் ஒரு பங்கினருக்குப் பெரியவர்களான பின்பும் வலிப்பு நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு’ என்கிறார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply