கீரையின் முக்கியத்துவம்

Loading...

கீரையின் முக்கியத்துவம்சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் ஆரோக்கியம் தருவது கீரைவகைகள் தான். அனைத்துவகை கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது, அதில் ஒன்றான பசலைக்கீரை மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது.மருத்துவ பயன்கள்

பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கல்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.

இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.

இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.

இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது, ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம்,பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply