காஷ்மீரி ஆலு தம்

Loading...

காஷ்மீரி ஆலு தம்
தேவையான பொருட்கள்:

ஒரே அளவான சிறு வகை உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
உறைந்த ஆடையுடன் கட்டித் தயிர் – 1/2 லிட்டர்


மசாலா செய்ய:

(இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
கஸீரி மேதி – 2 ஸ்பூன்
சிவந்த மிளகாய் – 4
நெய் – 3 ஸ்பூன்
தக்காளி ஜூஸ் – கெட்டியாக ஒரு கிண்ணம்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து உரிக்கவும்.

* டூத்பிக்கினால் கிழங்கு ஒவ்வொன்றையும் குத்திவிடவும்.

* வாணலியில் 3 ஸ்பூன் நெய்விட்டு உருளைக்-கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்.

* இஞ்சி முதல் மிளகாய் வரையுள்ள சாமான்களை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கும் உருளைக் கிழங்குடன் போடவும்.

* இரண்டும் சேர்ந்து பொன்னிறமானதும், தயிர் முழுவதையும் கடைந்து ஊற்றவும்.

* தயிர் கொதித்து வற்ற ஆரம்பித்ததும் தக்காளி ஜூஸைச் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்புப் பதமாக வந்தவுடன் இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply