கார்லிக் பரோட்டா

Loading...

கார்லிக் பரோட்டா
தேவையானவை:

மைதா – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

மைதாவோடு உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். இதில் சர்க்கரை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, நீர் விட்டு, தளர்வான, மிருதுவான மாவாக பிசையவும். இதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து இன்னொரு முறை அடித்து பிசைந்து… எண்ணெய் தடவி 6 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, மாவை உருண்டை களாக உருட்டவும். சப்பாத்தி இடும் மனை மீது சிறிதளவு மைதா தூவி, மாவு உருண்டையை வைத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும். அதன் மீது எண்ணெயை பரவலாக தடவி, புடவை கொசுவம் போல் மடித்து பின்னர் உருண்டைகளாக்கவும். பிறகு இதனை கனமான பரோட்டாக்களாக தட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, பரோட்டாவைப் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். பிறகு பரோட்டாவின் ஓரங்களை இரண்டு கைகளுக்கு நடுவே வைத்து தட்டவும். இப்போது அடுக்குகளோடு கூடிய கார்லிக் பரோட்டா ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply