காதுகளை பாதுகாக்கும் கருவிகள்

Loading...

காதுகளை பாதுகாக்கும் கருவிகள்ஓசையை உள்வாங்கும் காதுகளின் உட்புறம் அமைந்துள்ள மெல்லிய திசுக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழையும் அதிக சப்தத்தால் (கேட்கும்) திறனை சிலர் இழக்க நேரிடுகிறது. மருத்துவ ரீதியாக இவ்வகையிலான செவித் திறன் இழப்பானது ‘அளவுக்கதிகமான ஓசையினால் ஏற்படும் செவித் திறன் இழப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது.

பெரும்பாலும் தொடர்ந்து அதிக ஓசையை கேட்க நேரிடும் நபர்களுக்கு இவ்வகையிலான பாதிப்பு அதிகமாக நேரிடுகிறது. நோய் கட்டுப்பாடு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி 2069 வயதுக்குட்பட்ட 17 சதவீதம் பேர் இந்த பாதிப்புக்குள்ளாகி கேட்கும் திறனை நிரந்தரமாக இழந்து விடுவதாக தெரிய வந்துள்ளது.

மிக அதிக இரைச்சலுடனான இசை அல்லது ஓசை உங்களுடைய கேட்கும் திறனை நிரந்தரமாக தேசப்படுத்தி விடக்கூடும். நீங்கள் எவ்வளவு அதிக ஓசையால், எவ்வளவு காலமாக பாதிக்கப்படுகிறீர்கள்? என்ற தன்மைக்கேற்ப இந்த பாதிப்பில் ஏற்ற தாழ்வுகள் உண்டாகலாம்.

காலத்தின் நவீன மயத்திற்கு ஏற்ப இன்றைய இளைஞர்களின் பலர் எப்போதும் காதுகளில் இரைச்சலை எழுப்பும் ‘இயர் போன்களை’ தொடர்ந்து உபயோகிப்பதால் முதுமையடைந்த பின்னர் உடல் மூப்புக்கு ஏற்ப இயற்கையாகவே உண்டாகும் செவித்திறன் குறைபாடு ஒரு புறமிருக்க, இதை போன்ற அதிக ஓசையுள்ள இசையை அதிகமாக கேட்பதன் மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் குறுகிய வயதிலேயே செவித்திறனை இழந்து விடும் பேராபத்து அதிகரித்து வருகிறது.

எனினும், இவ்வகையிலான செவித்திறன் இழப்பு தொடர்பான குறைபாடுகளை நம்மால் தவிர்க்க முடியும்.

இந்த ஆபத்தை தடுக்க விவரம் அறிந்தவர்கள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்க வேண்டும்..

இதை போன்ற செவித்திறன் குறைபாடுகளால் தகவல் பரிமாற்றங்கள், கற்றல், போன்றவற்றில் சிரமம் ஏற்படும். காதுக்குள் தொடர்ந்து ரீங்கார ஓசை கேட்கும். கேட்கும் ஒலிகள் தடைபட்டு மங்கலாகவும் இருக்கும். சுற்றுச்சூழல் ஒலிகள் மற்றும் எச்சரிக்கை ஓசை ஆகியவற்றை கேட்க இயலாமல் போகலாம். அதிக ஓசை எழுப்பக்கூடிய ஜெனரேட்டர்கள், கனரக இயந்திரங்கள், துப்பாக்கி ஓசை போன்றவற்றில் இருந்து விலகியே இருங்கள்.உங்கள் செவித்திறனை பாதுகாக்க:

– அதிக ஓசையை தொடர்ந்து கேட்பதை தவிருங்கள் (அ) குறைத்து கொள்ளுங்கள்.

– இசை கேட்கும் போது ஒலி அளவை குறைத்து கொள்ளுங்கள்.

– அதிக ஓசை உள்ள இடங்களில் இருந்து விலகி இருங்கள்.

– மிகுந்த ஓசையை கட்டுப்படுத்தி மிதமான ஓசையை செவிக்கு அனுப்பும் சாதனங்களை காதுக்குள் பொருத்தி கொள்ளுங்கள்.

இத்தகைய காது அடைப்பான் சாதனங்கள் இருவகைகளில் எங்களிடம் கிடைக்கின்றன. காது அடைப்பான்: காதில் உள்புற பகுதியை மறைக்க இது பயன்படுகிறது. இவை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் வகையிலும் தொடர்ந்து பயன்படுத்தும் முறையிலும் கிடைக்கின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply