கவரும் கைகள் வேண்டுமா

Loading...

கவரும் கைகள் வேண்டுமாஅழகான கைகளும், நகங்களும் பார்ப்பவர்களை கவரக்கூடியவை. பொதுவாக பெண்கள் முகத்துக்கு காட்டும் அக்கறையை கைகளுக்கு காட்டுவதில்லை. முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வயதைக் காட்டினாலும் கைகளில் ஏற்படும் சுருக்கங்கள் அதை அதிகப்படுத்திக் காட்டுவதுடன் பெர்சனாலிட்டியையும் குறைத்துக் காட்டும்.
* பாத்திரம் தேய்க்கும் போதும், துணி துவைக்கும் போதும் தண்ணீர், சோப்பால் கைகள் சொரசொரப்பாக மாறிவிடும். கைகளுக்கு அடிக்கடி ஒயிட் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொள்ளுங்கள். கைகள் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* நகத்தால் பாட்டில் திறப்பது, நகத்தை கடிப்பது போன்றவை செய்யாதீர்கள். நகங்களை ஒரே சீராக ஓவல் வடிவில் வெட்டுங்கள்.
* சல்வாருடன் மேட்சிங்கான மெல்லிய கண்ணாடி வளைய ல்கள் (ஆறு அல்லது எட்டு) அணியலாம்.
* குண்டு விரல்களாக இருந்தால் அணியும் மோதிரங்கள் மெல்லிய கம்பி போன்று இருப்பதும், சிறு கற்கள் கொண்ட நெளிமோதிரமும் அழகு சேர்க்கும்.
* குண்டான கைகளுக்கு மெல்லிய வளையல்கள், மெல்லிய ப்ரேஸ் லெட், மெல்லிய ஸ்டிராப் வைத்த வாட்சுகள் மிகவும் அழகாக இரு க்கும்.
கலர் கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply