கர்ப்ப காலத்தில் பருத்தி உடைகளே சிறந்தது

Loading...

கர்ப்ப காலத்தில் பருத்தி உடைகளே சிறந்ததுபிரசவத்துக்கு வரும் பெண்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி… படிக்காதவர்களாக இருந்தாலும் சரி…. பெரும்பாலும் நைட்டி அணிந்தபடிதான் வருகிறார்கள். அவர்களை பரிசோதனை செய்ய இந்த உடை பெரும் தடையாக இருக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள்.

மேலும், சிலர் உள்ளாடைகளும் அணிந்திருப்பதில்லை. பருத்த வயிறுடனும் கனத்த மார்பகங்களுடனும் வரும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் உள்ளவர்களையும் சிரமப்படுத்துகிறார்கள். பிரசவம் ஆன பிறகும்கூட நைட்டியை இவர்கள் கழற்றுவதில்லை. நைட்டி வழியாக குழந்தைகளுக்கு பால் கொடுக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

நம் நாட்டின் சீதோஷண நிலைக்கு காட்டன் உடைகளே மிகவும் சிறந்தது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் துய்மையான உடைகளை அணிய வேண்டும். கனமான உடைகளையோ, இறுக்கமான உடைகளையோ அணிவது அவர்களுக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லதல்ல.

எனவே இந்த காலகட்டத்தில் இந்த வகையான உடைகளை தவிர்ப்பது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லது. பிரசவ காலங்களில் பருத்தியினால் ஆன சேலையும். ஜாக்கெட்டும் அணிவதுதான் நல்ல ஆரோக்கியம் தரும்.

நைட்டி என்பது இரவில் மட்டுமே அணியவேண்டிய உடை என்பதை இனியாவது நம் பெண்கள் உணரட்டும். எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் பருத்தியினால் ஆன உடைகளை அணிவதே மிகவும் சிறந்தது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply