கர்ப்ப காலங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் தடுக்க

Loading...

கர்ப்ப காலங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் தடுக்கஇதுவரை சருமத்தை அழகாக பராமரித்து வந்த பெண்கள், கர்ப்பமாக இருக்கும் போது வருத்தப்படும் ஒன்று தான் வயிறு பெரிதாகும் போது ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவது. பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் தான் மிகவும் சந்தோஷமான ஒன்று.

மேலும் எவ்வளவு தான் குழந்தையின் வளர்ச்சியை நினைக்கும் போது சந்தோஷம் இருந்தாலும், வயிற்றில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் பார்க்கும் போது சிறிது வருத்தமும் ஏற்படும். ஆனால் இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் இருக்க, ஒருசில செயல்களை பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மேலும் ஆய்வு ஒன்றிலும், கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தண்ணீர் அதிகம் குடித்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுப்போன்று நிறைய உள்ளன. இங்கு அவற்றில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குள் வராமல் தடுக்கலாம்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடித்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதுடன், சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம். ஏனெனில் சருமத்தில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும் போது, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான அளவு தண்ணீரை குடித்து வாருங்கள்.

சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படும் போது, அரிப்புகள் ஏற்படும். அப்படி அரிப்புகள் ஏற்படும் போது, மறந்தும் சொறிய வேண்டாம். இதனால் கீறல்கள் ஏற்பட்டு தழும்புகள் ஏற்படுவதுடன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் தடுக்க தினமும் வயிற்றில் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் ஆலிவ் ஆயில் மசாஜ் ஸ்ட்ரெட்ச் மார்க்கை தடுக்க ஒரு சிறந்த வழியாகும்.

உடற்பயிற்சியை கர்ப்பிணிகள் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமத்தின் மீள்தன்மை அதிகரிக்கும். எனவே தினமும் லேசான உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.

ஆலிவ் ஆயில் போன்றே, வைட்டமின் ஈ சத்தும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கும். இத்தகைய வைட்டமின் ஈ ஷியா வெண்ணெயில் அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தாலும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவது தடுக்கப்படும்.

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலமும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை தடுக்கலாம்.

கற்றாழையின் ஜெல்லின் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளது. ஆகவே இந்த கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க் வருவது போன்று உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் தங்களது உடல் எடையை பராமரிக்க வேண்டும். எடை அதிகமாக இருந்தால், பிரசவம் கஷ்டமாக இருப்பதுடன், அதுவே அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை ஏற்படுத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply