கருவைத் தாங்கும் தாய்மாரது சருமப் பிரச்சினைகளும் தீர்வும்

Loading...

கருவைத் தாங்கும் தாய்மாரது சருமப் பிரச்சினைகளும் தீர்வும்கர்ப்ப காலத்தில் மிகுந்த அழகுடனும் ஒளிரும் முகத்துடனும் உள்ள உங்களுக்கு அது வாழ்நாட்களிலேயே சிறந்த நாட்களாக இருக்கிறது. வெகு சீக்கிரம் தாயாகப் போகும் நீங்கள் மிகுந்த ஆனந்தத்துடன் காணப்படுகிறீர்கள். தாயாகும் சந்தோஷத்துடன் இருக்கும் உங்களுக்கு ஒரு சில பிரச்சனைகளும் வரலாம். இந்த கருவைத் தாங்கும் பத்து மாதங்களில் உங்களுக்கு காலை எழுந்ததும் வாந்தி அல்லது கால்களில் வீக்கம், தலை சுற்றுவது, எடை அதிகரித்தல் இது போன்ற சில் பிரச்சனைகள் வரக்கூடும். அது மட்டுமல்லாமல் தோல் தொடர்பான சருமப் பிரச்சனைகளும் ஏற்படும். கர்ப்ப காலம் என்பது பரிசுகளைப் பெறும் காலமாக மட்டுமல்லாமல், சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் காலமாகவும் உள்ளது. கர்ப்ப காலத்தில் உடல் அதிக மாற்றங்களை சந்திக்க நேர்கின்றது.
மிக முக்கியமாக சருமம், முடி மற்றும் நகங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எண்ணெய் நிறைந்த சருமத்தை உடையவர்களுக்கு பருக்கள் அதிகம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது ஏன் என்றால் ஆண் ஹார்மோன் சுரப்பி கர்ப்ப காலத்தில் அதிகமாக சுரக்கின்றது. இது அதிக அளவு எண்ணெய் சுரப்பிகளை உருவாக்குகிறது. இதுவே எண்ணெயை அதிகம் சுரக்க வைக்கிறது. நிறைய பெண்களுக்கு முகத்தில் கரும் படைகள் வரக் கூடும். இந்த கரும்புள்ளிகளும் படைகளும் தாடை எலும்பு, மேல் உதடு மற்றும் மூக்கு ஆகிய பகுதிகளில் வரும். இந்த புள்ளிகளும் படைகளும் குழந்தை பிறந்த சில மாதங்களில் மறைந்து போய் விடும்.
குழந்தை பிறந்து உங்கள் உடல் பழைய நிலைமைக்கு வருவதற்கு சில மாதங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிகளின் வயிற்றுப்பகுதி விரிவடைவதால் அதன் தழும்புகள் கீழ் வயிற்றில் உருவாகி அங்கேயே தங்கி விடுகின்றன. இந்த விரிவுகள் ஏற்படும் போது மிகுந்த அரிப்பும் ஏற்படுகின்றது. இதனால் வயிறும் பெரிதாகிறது. இத்தகைய விளைவுகளை தீர்ப்பதற்கு சில வழிகள் உள்ளன. அதைப் பார்ப்போமா!

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. கர்ப்ப காலத்தில் இருப்பதனால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்பது கிடையாது. உங்களுக்கு மருத்துவ ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்றால், நிச்சயம் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலில் வியர்வையை வரவழைத்து சக்தியை அதிகரிக்கும்.

உணவு முறை

காரசாரமான உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இத்தகைய உணவுகளை அடிக்கடி சாப்பிடும் போது பருக்கள் உருவாவது மட்டுமல்லாமல் உடலில் அமிலத்தன்மையும் உருவாக்கிறது.

தண்ணீர்

எவ்வளவு தண்ணீர் அருந்த முடியுமோ அவ்வளவு குடிப்பது சிறந்தது. கர்ப்ப காலத்தில் விரைவாக இருக்கும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்த இது உதவுகின்றது.

இளநீர்

இளநீர் ஒரு சத்தான பானமாகும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் குடிக்க வேண்டிய மிக முக்கியமான உணவாகும். நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள் என்று தெரிந்த நாளிலிருந்து அவசியம் இளநீர் குடிக்க வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது. இளநீருக்கு வயதை குறைவாக காட்டும் சக்தியும் உள்ளது. இளநீரை அருந்தும் போது பருக்கள் வராமல் தடைபடுகின்றன அது மட்டுமில்லாமல் கருப்பையின் சக்தியும் அதிகப்படுத்தப்படுகிறது.

கிரீம் மற்றும் லோஷன் மாஸ்க்

கர்ப்ப காலத்தில் எந்தவித இரசாயன பொருட்களும் பயன்படுத்துவது நல்லது கிடையாது. இதை பயன்படுத்தும் போது சருமம் அதை ஈர்த்துக் கொண்டு குழந்தையின் நலனை கெடுக்க நேரிடும். இயற்கை உணவு மற்றும் இயற்கையான பொருட்களை எப்போதும் பயன்படுத்துங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேப்பிலையை நன்கு அறைத்து பயன்படுத்துங்கள். இவை நிச்சயம் மாற்றங்களை கொண்டு வரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply