கருவுற்ற பெண்களுக்கு போலிக் அமிலத்தின் அவசியம்

Loading...

கருவுற்ற பெண்களுக்கு போலிக் அமிலத்தின் அவசியம்ஒரு செல்லணுவாக இருக்கும் மனிதக் கருவானது முதலில் 2, 4, 8,16, 32, 64, 128, 256 என்று பல செல்லணுக்களாகப் பெருக்கமாகி பின்னர் அது உள்மடித்து நம் உடலின் உள்ளறையாகவும் உள்ளுறுப்புகலாகவும் உருகொள்கின்றன.

இது பிழையில்லாமல் நடந்தேற பெண்ணிற்கு போலிக் அமிலம் அவசியம் வேண்டும். அப்படி போதிய போலிக் அமிலம் இல்லாவிட்டால் இந்த செல்பெருக்கம் மற்றும் உள்மடித்தலில் தவறுகள் நிகழ்ந்து பிறவிக் கோளாறு உள்ள குழந்தைகள் உருவாக வழிவகுக்கும்.

இந்த செல்பெருக்கம் மற்றும் உள்மடித்தல் நிகழ்வானது கருத்தரித்த ஐந்து நாட்களில் நிகழ்கிறது. ஆனால், ஒரு பெண் கருத்தரித்திருக்கிறாளா இல்லையா என்ற விவரம் அந்தப் பெண்ணின் மாதப்போக்கு வராமல் போகும் போதுதான் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே, கருத்தரித்திருப்பது பல நாட்கள் கழித்து தான் தெரிந்து கொள்கிறோம். அப்பொழுது போலிக் அமில மாத்திரை எடுப்பதால் யாதொரு பயனும் இல்லை.

அகவே, திருமணமான பெண் கருத்தரிக்கும் முன்னர் போலிக் அமிலம் அதிகம் கொண்ட பசலைக் கீரை, குடமிளகாய், பேரீச்சை, கருப்பு திராட்சை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, உள்ளிட்டவைகளை அதிகம் எடுக்க வேண்டும். குறிப்பாக சத்துள்ள உணவுகளை எடுக்க வேண்டும்.

அப்புறம் நம் வீட்டில் இருக்கும் மேல்நிலைத் தொட்டியில் அதிக அளவு பாசி இருந்தால் அதில் போலிக் அமில உற்பத்தி அதிகமாக இருக்கும். பாசிகள் போலிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். அதிக சுத்தம் மற்றும் சுகாதாரம் என்று எண்ணி மினரல் வாட்டர் குடிக்கும் பெண்களுக்கு போலிக் அமிலம் அதிகம் கிடைக்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply