கம்ப்யூட்டரில் ஹார்ட் ட்ரைவ் பிரச்சினையை கண்டறிவது எவ்வாறு

Loading...

கம்ப்யூட்டரில் ஹார்ட் ட்ரைவ் பிரச்சினையை கண்டறிவது எவ்வாறுஹார்ட் ட்ரைவ்களில் ஏற்படும் பழுதுகளால், விண்டோஸ் முடங்கிப் போவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பயாஸ் புரோகிராம் சரியாக வடிவமைக்கப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டர், ஹார்ட் ட்ரைவில் பூட் செய்யக்கூடிய பகுதியைத் தேடி அறிய முடியவில்லை எனில், இதற்குக் காரணம் ஹார்ட் ட்ரைவாகத்தான் இருக்க முடியும்.

பொதுவாக, இவற்றில் பதிந்துள்ள பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போதுதான், ஹார்ட் ட்ரைவில் பிரச்னை இருப்பது தெரியவரும். இலவசமாக ஹார்ட் ட்ரைவினை சோதித்து முடிவுகளைத் தரும் புரோகிராம்கள், இணையதளங்களில் கிடைக்கின்றன.

இவற்றைப் பயன்படுத்தி, சோதனை செய்து, கிடைக்கும் அறிக்கையில் தவறு உள்ளது என முடிவு கிடைத்தால், உங்கள் ஹார்ட் ட்ரைவ் தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறது என்று பொருள்.

எப்படியாவது சரி செய்து, அதில் உள்ள டேட்டாவினை மீள எடுத்துவிட்டு, ட்ரைவினை அழித்துவிடுவதே நல்லது. அதற்கு முன், அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து, இயக்கிப் பார்க்கலாம்.

அதில் சரியாக இயங்கினால், மீண்டும் சோதனை நடத்திப் பார்த்து முடிவெடுக்கலாம். ட்ரைவ் சரியாக உள்ளது என சோதனை முடிவுகள் தெரிவித்தால், பிரச்னை கம்ப்யூட்டரின் பிற பகுதிகளில் உள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply