கம்பு மோர்க்கூழ்

Loading...

கம்பு மோர்க்கூழ்
தேவையானவை:
கம்பு மாவு – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், தயிர் – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
தயிரைக் கடைந்து ஒரு கப் நீர் விட்டுக் கலக்கி மோராக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… சின்ன வெங்காயம், இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, கடைந்த மோரை ஊற்றி, உப்பு போட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கம்பு மாவை போட்டு கைவிடாமல் கிளறவும். மாவு வெந்தவுடன் இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply