கம்பு ஜவ்வரிசி இட்லி

Loading...

கம்பு  ஜவ்வரிசி இட்லி
தேவையானவை:
கம்பு – ஒரு கப், இட்லி அரிசி – 3 கப், ஜவ்வரிசி – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கறி வேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:
கம்பு, ஜவ்வரிசி, இட்லி அரிசியை தனித்தனியே 3 – 4 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். இதை 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தாளிக்க வேண்டியதை தாளித்து மாவில் சேர்த்துக் கிளறி, இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply