கம்பியூட்டர் இணைய இணைப்பில் உள்ளதை எப்படி அறிந்து கொள்ளலாம்

Loading...

கம்பியூட்டர் இணைய இணைப்பில் உள்ளதை எப்படி அறிந்து கொள்ளலாம்இது வழமையாக கம்பியூட்டர் மொனிற்றர் இன் டாஸ்க் பாரின் கீழ் மூலையில் காட்டப்படும்.

ஏற்கனவே இருந்திருக்கும். அதனை மறைக்கும் வகையில் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை உங்களையும் அறியாமல் மேற்கொண்டிருக்கலாம்.


அவற்றைப் பெறும் வழிகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

Notification ஐகான் என அழைக்கப்படும், டாஸ்க்பாரின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினை அழுத்தி, கிடைக்கும் மெனுவில் customize என்பதில் கிளிக் செய்திடவும். இந்த பட்டியலில், நெட்வொர்க் ஐகானைக் கண்டறிந்து, கீழ் மெனுவில் கிளிக் செய்திடவும். இங்கு “Show icons and notifications” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் நெட்வொர்க் ஐகான் காட்டப்படும்.

இப்போதும் அவை காணப்படவில்லை என்றால், Control Panel சென்று Network Connections என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நெட்வொர்க் இணைப்புகளும் காட்டப்படும்.

அதில் ஒன்றில் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும்.

கிடைக்கும் திரையில் Show icon in notification area when connected என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும்.

இனி, இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், இந்த ஐகான் காட்டப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply