கம்பியூட்டரின் இயங்கு வேகத்தை அதிகரிக்க

Loading...

கம்பியூட்டரின் இயங்கு வேகத்தை அதிகரிக்கபுதிய கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வாங்கி ஓர் ஆண்டுதான் ஆகிறது. ஆனால், இப்போது மிகவும் மெதுவாக இயங்குகிறது. குறிப்பிட்ட சில வேலைகள் தான் இதில் மேற்கொள்கிறேன். இதனை வேகமாக இயங்க வைத்திட என்ன வழி?

பதில்: தங்கள் ஆதங்கம் புரிகிறது. இது அனைவருக்கும் வரும் பிரச்னைதான். கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம். பின்னர் நீக்குகிறோம். பைல்களை டவுண்லோட் செய்து பதிகிறோம். இவை தவிர நம்மை அறியாமலேயேபல புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரில் தங்கி பின்னணியில் இயங்குகின்றன.

இவை எல்லாம் சேர்ந்துதான் கம்ப்யூட்டரின் வேகத்தை மட்டுப் படுத்துகின்றன. மீண்டும் பழையபடி வேகமாக இயங்குவதற்குத் தேவையான சில வழிகளை வரிசை யாகத் தருகிறேன்.

1. உங்களிடம் உள்ள அன்ரிவைரஸ் தொகுப்பு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்து, இல்லையேல் அப்டேட் செய்திடவும். இன்னொரு அன்ரிவைரஸ் தொகுப்பு ஒன்றையும் இன்ஸ்டால் செய்து, முன்னதை நிறுத்தி இதனை இயக்கிப் பார்க்கவும்.இதனால், மால்வேர் புரோகிராம்கள் இருப்பின் அவை கண்டறியப்பட்டு அழிக்கப்படும்.

2. கேம்ஸ் போன்ற மிகப் பெரிய புரோகிராம்கள் மட்டுமின்றி, சில சிறிய புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குவது, ராம் மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும். எனவே, கூடுதலாக ராம் மெமரியை அதிகரிக்கலாம்.

3.டாஸ்க் மேனேஜரைத் திறந்து, என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பார்க்கவும். அவை எவ்வளவு ராம் மெமரியை எடுத்துக் கொண்டுள்ளன என்றும் காட்டப்படும். உங்களுக்குத் தேவைப்படாத புரோகிராம்கள் எவையேனும் இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால், அவை தேவை இல்லை எனில் நீக்கவும்.

4. மெமரி கிளீனிங் புரோகிராம்கள் சில உங்களுக்கு உதவலாம். இவை ராம் மெமரியை ஒதுக்கிக் கொடுக்கும். ஆனால், மீண்டும் கம்ப்யூட்டரை இயக்குகையில், பழையபடி பல புரோகிராம்கள் மெமரியை எடுத்துக் கொள்ளும்.

5. நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை அப்டேட் செய்வது நல்லது. ஆனால், எந்த விதக் கூடுதல் வசதிகளும் இல்லாமல், அப்டேட் செய்வது, இந்த புரோகிராம்கள் அதிக இடத்தை மெமரியில் எடுத்துக் கொள்ள வழி கொடுக்கும். எனவே, தேவைப்பட்டாலே, அப்ளிகேஷன் புரோகிராம்களை அப்டேட் செய்திடவும்.

6. நீங்கள் கம்ப்யூட்டரை பூட் செய்தவுடனேயே, சில புரோகிராம்கள் இயங்கி, ராம் மெமரியில் இடத்தை எடுத்துக் கொள்ளும். பின்னணியில் இயங்கியவாறு எந்த பயனும் இன்றி இருக்கும். இவற்றை பூட் செய்கையிலேயே தொடங்கும் செயல்பாட்டினை நிறுத்தலாம். அல்லது நீக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply