ஒயிட் க்ரேவி

Loading...

ஒயிட் க்ரேவி

தேவையான பொருட்கள்:

புளிப்பில்லாத தயிர் – 1 கப்
க்ரீம் – 1/2 கப்
துருவிய பாலாடை (அ) பன்னீர் பால் – 1 டீ ஸ்பூன்
உடைத்த முந்திரி – 1 குழிக்கரண்டி
உரித்து லேசாக வறுத்தப் பட்டாணி – 1 டீ ஸ்பூன்
பால் – 2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
நறுக்கிய கொத்தமல்லி – 1 குழிக்கரண்டி
ப்ரெட்டின் வெள்ளைப் பகுதி – 1 துண்டு
சர்க்கரை – 1 டீ ஸ்பூன்
செர்ரீ (விருப்பப்பட்டால்) – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பட்டை-இலவங்கம் பொடி – 1/5 டீ ஸ்பூன்
நெய் (அ) எண்ணெய் – 3 குழிக்கரண்டி
தேவையான காய்கறிகள் – 1/4 கிலோ



செய்முறை:

* முந்திரி, பட்டை, ப்ரெட் மூன்றையும் உலர்ந்த மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், இஞ்சி, மிளகாய், கசகசா இவற்றை பால் சேர்த்து அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் (அ) நெய் சூடு செய்து, அரைத்த வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.

* தயிர் சேர்த்து அதன் வெள்ளை நிறம் மாறும்வரை விடாமல் கிளறவும்.

* பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சர்க்கரை, உப்புப்பொடி, காரப்பொடி, க்ரீம் சேர்க்கவும்.

* கொதிக்கும்வரை மெதுவாகக் கிளறவும். இந்நிலையில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

* கெட்டியாக வரும்வரை சிறிது நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* துருவிய பாலாடை, கொத்தமல்லி, செர்ரீ கொண்டு அலங்கரிக்கவும்.



குறிப்பு:

இரும்பு வாணலியில் சமைப்பதைத் தவிர்க்கவும். அடிப்பாகம் கனமாக இருக்கும் எவர்சில்வர் (அ) காப்பர் பாத்திரத்தைப் பயன்படுத்தவும்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN