ஐ.ஓ.எஸ்.8 க்கு மாறும் முன்

Loading...

ஐ.ஓ.எஸ்.8 க்கு மாறும் முன்புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவதற்கு அனைத்து ஆப்பிள் வாடிக்கையாளர்களும் ஆசைப்படுவார்கள். ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்திற்கு மாறும் முன்னர், சில விஷயங்களை இவர்கள் உறுதிப் படுத்திக் கொண்டால் நல்லது.

முதலில் தங்களின் மொபைல் சாதனம், ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தினை ஏற்றுச் செயல்படுமா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த சாதனங்களில் இதனைப் பயன்படுத்தலாம் என்பதற்கான பட்டியல் இங்கு தனியே தரப்பட்டுள்ளது. அதனைக் காண்க. அல்லது இணையப் பக்கங்களில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள சாதனத்தைப் பொறுத்து ஐ.ஓ.எஸ்.8 இருக்கிறது. அது 1.1 ஜி.பி. இடத்தை எடுத்துக் கொள்ளும். இருப்பினும், தங்கள் சாதனங்களில் இதனைப் பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள், அவற்றில் குறைந்தது 6 ஜி.பி. இடம் இருப்பதனை உறுதி செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் எளிதாக, இந்த சிஸ்டத்தினை டவுண்லோட் செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஐ ட்யூன்ஸ் வழியாக டவுண்லோட் செய்தால், இடம் சற்றுக் குறைவாக இருக்கலாம். இருந்தாலும், உங்கள் சாதனத்தில் சற்று கூடுதலாக இடம் இருப்பது நல்லது. இதற்கு நீங்கள் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை நீக்கலாம். நீக்குவதற்கு, அந்த அப்ளிகேஷனுடைய ஐகானில், விரலை வைத்து அழுத்தவும். இப்போது அப்ளிகேஷன் ஐகான் சற்று நடுக்கமுறும். அதே நேரத்தில் ஒரு ஓரத்தில் எக்ஸ் மார்க் அடையாளம் கிடைக்கும். அதில் அழுத்தினால், அப்ளிகேஷன் நீக்கப்படும்.

உங்கள் சாதனத்தில் எவ்வளவு இடம் காலியாக உள்ளது என்று அறிய Settings, தேர்ந்தெடுத்து General என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Usage என்பதில் கிளிக் செய்தால், பயன்படுத்திய இடமும், காலியாக உள்ள இடமும் காட்டப்படும்.
போட்டோக்கள் மற்றும் வீடியோ பைல்கள் நிறைய இருந்தால், அவற்றை ஐ க்ளவ்ட், கூகுள் ட்ரைவ் அல்லது கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவ் அல்லது வேறு ஏதேனும் ஸ்டோரேஜ் மீடியத்திற்கு மாற்றவும்.

இதனால் உங்கள் சாதனத்தில் இடம் கிடைக்கும்.

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளும் இந்த நேரத்தில் அப்டேட்டுக்காகக் காத்திருக்கும் மற்ற அப்ளிகேஷன்களையும் அப்டேட் செய்து கொள்ளலாம். எந்த அப்ளிகேஷன்களுக்கு அப்டேட் உள்ளது என்று அறிய, Settings, தேர்ந்தெடுத்து General என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Software Update என்பதில் கிளிக் செய்தால் அப்டேட் தேவைப்படும் அப்ளிகேஷன்கள் எவை என்று காட்டப்படும்.

பொதுவாக, ஆப்பிள் தரும் சிஸ்டம் அப்டேட் செயல்பாட்டினால், பிரச்னைகள் ஏற்படாது. இருப்பினும், உங்கள் சாதனத்தில் உள்ள டேட்டாவினை பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் கம்ப்யூட்டரில் அண்மைக் காலத்தில் உள்ள ஐ ட்யூன்ஸ் இன்ஸ்டால் செய்து கொள்க. பின்னர், யு.எஸ்.பி. கேபிள் மூலம், ஆப்பிள் மொபைல் சாதனத்தினை கம்ப்யூட்டரில் இணைக்கவும். பின்னர், சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் கிடைக்கும் மெனுவில் மேலாக உள்ள Summary டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து வலது பக்கம் காட்டப்படும் “Back Up Now” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். ஐ க்ளவ்ட் வசதியைப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் கம்ப்யூட்டர் என்பதற்கு மேலாக உள்ள iCloud ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply