ஐந்து வற்றல் குழம்பு

Loading...

ஐந்து வற்றல் குழம்பு
தேவையானவை:
மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல், அவரைக்காய் வற்றல், கொத்தவரங்காய் வற்றல் – தலா ஒரு கைப்பிடி அளவு, தக்காளி – 100 கிராம், தோல் உரித்த சின்ன வெங்காயம் – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: மிளகு, சீரகம், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, எள் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:
புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, எல்லா வற்றல்களையும் ஒன்று ஒன்றாக போட்டு தீய்ந்து விடாமல் வதக்கி… சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். குழம்பு வற்றி `திக்’காக வரும்போது வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply