ஏற்கனவே பரு வந்து தழும்புகளும் தங்கி விட்டவர்கள் என்ன செய்யலாம்

Loading...

ஏற்கனவே பரு வந்து தழும்புகளும் தங்கி விட்டவர்கள் என்ன செய்யலாம்வெறும் ஃபேஷியல் மட்டுமே தழும்புகளைப் போக்காது. மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோதெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் இவர்களுக்குப் பலன் தரும். தழும்பு ஏற்பட்டவர்களது சருமத்தில் குழிகள் காணப்படும். மைக்ரோடெர்மாப்ரேஷன் என்கிற சிகிச்சை, சருமத்தை சமன்படுத்தி, குழிகளை மறைக்கும். 95 சதவிகிதம் தழும்புகள் மறையும். 100 சதவிகிதம் தெரியாமலிருக்க ஸ்கின் பீல் சிகிச்சை மட்டுமே தீர்வு. சருமத்தின் ஒரு லேயரை அப்படியே உரித்தெடுத்து, சருமத்தைப் புதுப்பிக்கச் செய்கிற இந்த சிகிச்சைக்குப் பிறகு சூரிய வெளிச்சமோ, வீட்டுக்குள் பல்பு வெளிச்சமோகூட படக்கூடாது. வெளிச்சம் பட்டால், ஸ்கின் பீல் செய்யப்பட்ட சருமம் கருப்பாகி, அது நிரந்தரமாகத் தங்கி விடும்.
மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோ தெரபி சிகிச்சை களை 20 வயதுக்கு மேலானவர்கள் செய்து கொள்ளலாம். 30 வயதுக்கு மேலானவர்கள் வாரம் 2 முறை மைக்ரோடெர்மாப்ரேஷன் செய்து கொள்ளலாம். தழும்புகளை நீக்குவதில் அரோமாதெரபி சிகிச்சைக்குப் பெரும் பங்கு உண்டு. அது சருமத்தில் புதிய செல்கள் உருவாக உதவும்.மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சையுடன், சைப்ரஸ் ஆயில், நட்மெக் ஆயில், பெர்கமாட் ஆயில், பெடிட்க்ரெயின் ஆயில், சாண்டல்வுட் ஆயில் ஆகியவை கலந்த அரோமா தெரபியையும் சேர்த்துக் கொடுக்கும் போது, தழும்புகள் நீங்கி, சருமம் புத்துணர்வு பெறுவது துரிதப்படுத்தப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply