என்.எச்.எம். ரைட்டர் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யும் போது சிக்கலா

Loading...

என்.எச்.எம். ரைட்டர் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யும் போது சிக்கலாநான் விண்டோஸ் 7 மற்றும் வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் யூனிகோட் தமிழில், என்.எச்.எம். ரைட்டர் பயன்படுத்தி டாகுமெண்ட்களைத் தயாரிக்கிறேன். இதில் தமிழில் டைப் செய்கையில், இரண்டு மெய்யெழுத்து தொடர்ந்து டைப் செய்தால், முதல் மெய்யெழுத்து, உயிர் நீங்கி மெய்யெழுத்தாக அமைகிறது. அதாவது, ”நிறுவனங்கள்” என்று டைப் செய்தால், நிறுவன்ங்கள் என்று ஆகிறது. இது எதனால்? ஆனால், என் நண்பர் லேப்டாப் கம்ப்யூட்டரில் சரியாக வருகிறது. செட்டிங்ஸ் பலமுறை புதியதாக அமைத்தும் பார்த்தேன். சரியாகவில்லை. இதற்கான சரியான வழி காட்டவும்.

பதில்: இந்த பிரச்னை தமிழ் யூனிகோட் பயன்படுத்தும் பலர் என்னிடம் தெரிவித்து, தீர்வினையும் பெற்றுச் சென்றுள்ளனர். உங்கள் வேர்ட் புரோகிராமில் தான் இதனைத் தீர்ப்பதற்கான செட்டிங்ஸ் வழி உள்ளது. வேர்ட் ரிப்பனில், கிளிக் செய்து Word Options தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த விண்டோவின் இடது புறம் Language Settings என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Enabled Editing Languages என்பதில், English மற்றும் அதற்குக் கீழாக, Tamil என்று இருக்கும். Tamil என்பதனைத் தேர்ந்தெடுத்து, Remove என்பதில் கிளிக் செய்து, அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் கூறும் மெய் எழுத்து பிரச்னை வராது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply