என்றும் உங்களுடன்

Loading...

என்றும் உங்களுடன்பலர் தங்கள் கைப்பையில் அளவுக்கு அதிகமான மேக்கப் சாதனங்களை வைத்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. இதனால் தேவையில்லாத பளுவை சுமப்பதுடன், தேவையான பொருளை எடுப்பதற்கு படும்பாடு அப்பப்பா!! எங்கு சென்றாலும் உங்களுடன் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய மேக்கப் சாதனங்கள் இதோ:-


ஹவெட் கிளென்சிங் டிஸ்ஷூ:

முகத்திலிருக்கும் அழுக்கு, தூசி ஆகியவற்றை சுத்தம் செய்து மேக்கப் போட்டால் தான் முகம் பளிச்சிடும். இதற்கு ஈரமான ஹவெட் கிளென்சிங் டிஸ்ஷூ போல் வேறு எதுவும் இல்லை!!

முகத்திலுள்ள மாசுகளை மறைத்து சீரான தோற்றத்தைத் தரும். மாய்ஸ்சுரைசர் மற்றும் ஸன்ஸ்கிரீன் உள்ள ஃபவுன்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது முகத்தை மிருதுவாக வைக்கும் அத்துடன் வெய்யிலின் தீய கதிர்களிலிருந்தும் பாதுகாக்கும்.


மஸ்காரா:

மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நொடியில் கண்களின் அழகை பன்மடங்கு அதிகரிக்கக் கூடியது. கண்களை பெரிதாக தோன்றவைக்கும் தன்மை இதற்கு உண்டு.


லிப்ஸ்டிக்:

இது உதடுகளுக்கு புத்துயிர் கொடுக்கும். தேவைப்பட்டால் இதை ப்ளஷராகவும் உபயோகிக்கலாம். உதடுகளுக்கும் கண்ணங்களுக்கும் நிறத்தை சேர்க்க இது ஒன்றே போதும்.


காம்பேக்ட்:

மேக்கப்பிற்கு முழு வடிவம் கொடுப்பது பவுடர். இதற்கு காம்பேக்ட்டை உபயோகிப்பதே சிறந்தது. கண்ணாடியுடன் கிடைக்கும் காம்பேக்ட்டை வாங்கினால், தனியாக கண்ணாடியை எடுத்துச் செல்ல வேண்டாம்.

எப்பொழுதும் அழகாக தோற்றமளிக்க இனி ஒரு மூட்டையை சுமக்க வேண்டாம்!


முகம் பொலிவு பெற

சாதாரணமாக நடப்பதைவிட சற்று மெதுவாக நடக்க முயலுங்கள்.

மகிழ்ச்சியான, மனநிறைவான உணர்ச்சிகளை தினமும் பத்து நிமிடங்கள் மனதிலே கொண்டு வாருங்கள்.

சாதாரணமாகப் பேசுவதைவிட குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.

உங்களுக்காகத் தினமும் 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த முப்பது நிமிடங்களுக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே எழுந்து ஓடாதீர்கள். அமர்ந்து பின்னர் எழுந்து செல்லுங்கள்.

பேருந்தில் போகும்போதும், ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் போதும், மற்ற நேரங்களிலும் மக்களின் முகங்களைப் பாருங்கள்.

பிறர்மேல் உள்ள அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

உங்கள் கோபத்திற்கு உரிய காரணங்களைக் கண்டுகொள்ள இன்று முயலுங்கள்.

அழகான மரம், மலர் போன்ற இயற்கை காட்சிகளை நின்று ரசியுங்கள்.

உங்கள் முகம்கூட மலர்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறரைப் பார்க்கும்போது புன்முறுவல் பூத்துப் பழகுங்கள்.

வேகமாகப் போகிறவன் முகம் கவர்ச்சியாகவோ, அருளானதாகவோ இருக்க முடியாது என்பதை உணருங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply