எக் பாஸ்தா

Loading...

எக் பாஸ்தா
தேவையான பொருட்கள்:

பாஸ்தா – 2 கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 1/4 பாகம்
முட்டை – 2
குடைமிளகாய் – 1/4 பாகம்
சீரகத்தூள் – அரை டீ ஸ்பூன்
கரம் மசாலா – அரை டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை:

* வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக சேர்த்து வதக்கவும்.

* அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும்.

* நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும். முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும்.

* தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.

* சுவையான எக் பாஸ்தா ரெடி.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply