உள்ளூர் சேவையை நிறுத்த ஸ்கைப் முடிவு

Loading...

உள்ளூர் சேவையை நிறுத்த ஸ்கைப் முடிவுஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப்.

இதனிடையே வரும் நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் தனது சேவையை இந்தியாவில் உள்ள உள்ளூர் அழைப்புகளுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு காரணமாக இந்தியாவில் ஏற்கெனவே வாட்ஸ் அப், வைபர் போன்ற உடனடி ஆப்ஸ்களால் தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது என அந்த நிறுவனங்கள் ட்ராயிடம் வலியுறுத்தி இருந்தன.மேலும் அந்த நிறுவனங்கள் ஸ்கைப்பிற்கும் தங்களது கோரிக்கையை முன் வைத்திருந்ததன.

இந்நிலையில் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் இந்தியாவில் உள்ளூர் அழைப்புகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக ஸ்கைப் அறிவித்துள்ளது.அதேசமயம் ஸ்கைப் டு ஸ்கைப் கால் வசதியை இந்தியாவிற்குள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மற்ற செல்போன் அல்லது லேண்ட் லைன் நம்பரை தொடர்பு கொள்ள முடியாது என்றும் ஸ்கைப் அறிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply