உலக தரத்தில் நொக்கியாவை பின்தள்ளி முதலிடம் பிடித்த அப்பிள் செல்போன்

Loading...

உலக தரத்தில் நொக்கியாவை பின்தள்ளி முதலிடம் பிடித்த அப்பிள் செல்போன்உலகம் முழுவதும் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்துவது அடிப்படையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்தியதில் நோக்கியா நிறுவன தயாரிப்புகள் 37.67 சதவீத இடத்துடன் முதலிடத்தில் இருந்ததாக ஸ்டாட் கவுன்டர் (StatCounter) என்ற இணைய தள ஆய்வு நிறுவன புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. அதை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளி, முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.ஜனவரி நிலவரப்படி உலக அளவில் இணைய தள பயன்பாட்டில் 25.86 சதவீதத்துடன் ஆப்பிள் முதலிடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சாம்சங் 22.69 சதவீதத்துடன் 2வது இடத்திலும், நோக்கியா 2 இடங்கள் பின்தங்கி 22.15 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளதாக இணையதள ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 28.67 சதவீதத்துடன் 2வது இடத்திலும், 14.84 சதவீதத்துடன் சாம்சங் 3வது இடத்திலும் இருந்தன. அதன்படி, சாம்சங் நிறுவன செல்ஃபோன்களில் இணைய தள பயன்பாடு வேகமாக அதிகரித்திருப்பது தெரிய வந்தது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply