உயரும் ஸ்மார்ட் போன் விற்பனை

Loading...

உயரும் ஸ்மார்ட் போன் விற்பனைஉலகளாவிய அளவில், ஸ்மார்ட் போன் விற்பனை சென்ற மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 26 கோடியே 70 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனையான போன்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 1.13% கூடுதலாகும்.

இதில் சாம்சங் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதன் வளர்ச்சி 3.1% ஆகும். இதனை அடுத்து, லெனோவா + மோட்டாரோலா, ஹுவே, எல்.ஜி. ஆகிய நிறுவனங்கள் வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3% குறைந்துள்ளது.

வல்லுநர்களின் கணிப்பைக் காட்டிலும் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், சீனாவில், 4ஜி ஸ்மார்ட் போன் தயாரிப்பினைத் திட்டமிட்டு அதிக அளவில் உயர்த்தியதாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஸ்மார்ட் போன் விற்பனை 6.7% உயர்ந்து, 28 கோடியே 50 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் பன்னாட்டளவில், 34.9% மேலான பங்கினை விற்பனையில் கொண்டுள்ளது. இதற்குக் காரணம், இந்நிறுவனம் தொடக்க நிலை முதல், உயர்நிலை வரையில், பல மாடல்களைத் தொடர்ந்து வெளியிடுவதுதான். இது போல நிறைய எண்ணிக்கையில் மாடல்கள் இல்லாததால் தான், ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் விற்பனை சற்றுக் குறைந்துள்ளது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN