உமது கன்னங்கள் சிகப்பழகால் ஜொலிக்க வேண்டுமா

Loading...

உமது கன்னங்கள் சிகப்பழகால் ஜொலிக்க வேண்டுமா
சிகப்பழகு பெற

இரவில் தேவையான அளவு பாதாம் பருப்பை ஊறவைத்து மறுநாள் காலை அரைத்து பாலேட்டில் கலந்து முகம், கை, கழுத்து, கால்களில் தடவி ஊற வைத்து குளித்தால் தோலின் நிறம் மாறும்.

வெள்ளரிக்காய்சாறு, பால் இரண்டையும் கலந்து உடல் முழுவதும் பூசி ஊறவைத்து ½ மணி நேரம் கழித்து குளித்தால் உடல் பளபளப்படையும்.

குங்குமப்பூ 1 ஸ்பூனுடன் அதிமதுரம் கலந்து எட்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள கருமை நிறம் மாறி சிகப்பழகு பெறும்.

முகத்திற்கு அழகு கூட்ட: கேரட், ஆரஞ்சு சாற்றுடன் தேன் பால் கலந்து முகத்தில் தடவி 15-நிமிடம் கழித்து கழுவ வேண்டும். பாதாம்பருப்பை பாலுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20-நிமிடங்கள் கழித்து கழுவினால், முகத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

கடலைமாவுடன் சிறிது எலுமிச்சை சாறும், சேர்த்து கலந்து முகத்தில் தடவி குளித்தால், நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply