உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற வேண்டுமா

Loading...

உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற வேண்டுமாஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். நாம் உள்ளிழுக்கும் புகை, உணவகங்களில் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம்முடைய சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து வகையான கிருமிகள் மற்றும் குப்பை ஆகியவை என சகல நச்சுக்களையும் விரட்ட வேண்டியது நாம் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற செயலாகும்.அவகேடோ :

அற்புதத்தை ஏற்படுத்தக் கூடிய பழம் என பிரபலமாக இருக்கும் அவகேடோவில் நார்ச்சத்துக்களும், ஆக்சிஜன் எதிர்பொருட்களும் நிரம்பியுள்ளன. இவை தான் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுகளாகும். செரிமானத்திற்கு உதவி புரியும் நல்ல வகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவு தான் அவகேடோ.பீட்ரூட் :

நச்சுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினால், சூப்பர் உணவாக அறியப்படும் பீட்ரூட்களை உண்ண வேண்டும். புற்றுநோய்க்கு எதிரான மிகவும் சக்தி வாய்ந்த உணவுகளாக இவை உள்ளன.முட்டைக்கோஸ் :

நச்சுப் பொருட்களை விரட்டக் கூடிய அற்புதமான குணங்களை கொண்டிருக்கும் உணவு முட்டைக்கோஸ் ஆகும். முட்டைக்கோஸை தினமும் சாப்பிட்டால் நச்சுப் பொருட்களை விரட்டும் உங்களுடைய திட்டம் வேகம் பிடிக்கும்.வேர்க்கடலை :

வேர்க்கடலையின் அற்புதமான குணங்கள் நச்சுக்களை எதிர்த்து திறமையுடன் செயல்படுகின்றன. உடலில் உள்ள சில வகையான நச்சுக்களை வெளியேற்ற வேர்க்கடலை உதவுகிறது. சிறுநீர் குழாய் தொடர்பான தொற்றுக்களில் இருந்து விலகி இருக்கவும் வேர்க்கடலை உதவுகிறது.ப்ளூபெர்ரி :

ஆக்சிஜன் எதிர்பொருட்கள் நிறைந்துள்ள இந்த உணவு நச்சுக்களை வெளியேற்றும் அற்புதமான குணங்களைக் கொண்டுள்ளது. உடலில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸ்களை அறவே ஒழித்துக் கட்டுவது ப்ளூபெர்ரியின் தலையாய பணியாகும். நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்கப்படுத்துவதும் இவற்றின் மற்றொரு உதவியாகும்.பாதாம் :

ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல் புற்றுநோயைத் தவிர்ப்பது வரை என பல்வேறு வகையான ஆரோக்கிய பலன்களைக் கொண்டதாக பாதாம் கொட்டைகள் உள்ளன. வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் பாதாம்களில் நிறைந்துள்ளன.அஸ்பாரகஸ் :

அஸ்பாரகஸ் என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கொடியில் மிகவும் திறன் வாய்ந்த நச்சு நீக்கும் குணங்கள் உள்ளன. மூப்படைவதை தவிர்க்கும் வகையில் இவை மிகவும் சிறப்பாக செயல்படும் என்பது உங்களுக்கான இனிப்பான செய்தி. மேலும், அஸ்பாரகஸ் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயத்தையும் தவிர்த்திடும்.இலவங்கப்பட்டை :

ஆச்சரியமான ஆரோக்கிய குணங்கள் இலவங்கப்பட்டை எண்ணெயில் உள்ளது. சின்னாமால்டிஹைட் மற்றும் சின்னாமைல் அசிடேட் ஆகிய இலவங்க எண்ணெய்கள் துடிப்பான ஆக்சிஜன் எதிர்பொருட்களாகும். இவை தான் என்றென்றும் சிறப்பான ஆக்சிஜன் எதிர்பொருட்காள குறிப்பிடப்படுகின்றன. மேலும், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகவும் சக்தி வாய்ந்த உணவுப்பொருளாக இலவங்கப்பட்டை உள்ளது.ப்ராக்கோலி :

உங்களுடைய உடலையும், மனதையும் சுத்தப்படுத்தும் சக்தி கொண்ட உணவுகளில் ஒன்று ப்ராக்கோலி ஆகும். ஆக்சிஜன் எதிர்பொருட்கள் மற்றும் சில வைட்டமின்கள் நிரம்பியுள்ள ப்ராக்கோலி இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply