உடலில் உள்ள கழிவுகளை விரட்டும் உணவுகள்

Loading...

உடலில் உள்ள கழிவுகளை விரட்டும் உணவுகள்நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலம் உடலில் கழிவுகள்(நச்சுக்கள்) சேரும். உடலில் சேரும் கழிவுகளை(நச்சுக்களை) வெளியேற்ற உணவில் இனிப்பை அதிகம் சேர்க்காமல் இருந்தாலே போதுமானது ஆகும். அவ்வாறு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் உணவுகள்,இஞ்சி

மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.

முக்கியமாக இஞ்சியை சுடுநீரில் போட்டு காய்ச்சி, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும்.பூண்டு

பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும்.

எனவே தினமும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். மேலும் ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புகளும் கரையும்.நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள்

நட்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்.க்ரீன் டீ

உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுப் பொருட்களில் க்ரீன் டீ தான் முதன்மையானது. ஏனெனில் க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்(antioxidant)அதிகம் உள்ளது.

இதனால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பது, கொழுப்புகள் கரைந்து உடல் குறைவது மற்றும் டைப்-2 நீரிழிவின் தாக்கமும் குறையும்.இளநீர்

இளநீரில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாகவும், கொலஸ்ட்ரால் இல்லாமல் இருப்பதால், இதனை குடித்தால், உடல் சுத்தமாவதோடு, சருமமும் பொலிவு பெறும்.

மேலும் இளநீர் குடித்து வந்தால், செரிமானம் சீராக நடைபெறும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply