உங்கள் Domain Expire ஆகப்போகிறதா உடனடியாக Renewal செய்துவிடுங்கள்

Loading...

உங்கள் Domain Expire ஆகப்போகிறதா உடனடியாக Renewal செய்துவிடுங்கள்உங்களுடைய சொந்த இணையத்துக்காக நீங்கள் வாங்கிய Domain ஒரு வருடத்திற்கு மட்டும் செல்லுபடி ஆகும்படி வாங்கியிருப்பீர்கள். அந்த செல்லுபடி ஆகும் தேதி Expire Date முடிந்துவிட்டால் டொமைன் பெயர் காலாவதியாகிவிடும்.

இதுகுறித்து, உங்களுக்கு நினைவுபடுத்த நீங்கள் எந்த நிறுவனத்தில், டொமைன் பெயர் வாங்கினீர்களோ, அதிலிருந்து நினைவுபடுத்தும் மின்னஞ்சல் வந்திருக்கும்.

உங்களது பணிக்கிடையில் நீங்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், அப்புறம் பார்க்கலாம் என்று அசட்டையாக இருந்துவிடுவீர்கள்.

டொமைனில் எக்ஸ்பயர் டேட் முடியும்வரை விட்டுவிட்டு, பிறகு சாவகாசமாக அதை மீண்டும் புதுப்பிக்க நினைத்தால், அந்த டொமைன் வேறொருவரால் வாங்கிப்பட்டிருப்பது தெரியவரும்.ஏன் இப்படி?ஒருவரின் டொமைன் பெயரை மற்றவர்கள் ஏன் வாங்க வேண்டும்?

மிகப்பெரிய காரணம் உள்ளது. அந்த டொமைன் பெயரில் குறைந்த பட்சம் நீங்கள் ஒரு வருடம் பயன்படுத்தியிருப்பீர்கள். அந்த டொமைனிலிருக்கும்போது நீங்கள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் கூகிள் தேடல் தளத்தில் பதிவாகியிருக்கும். ஒவ்வொரு பதிவும், பதிவிற்கான இணைப்பும் (Post links) கூகிளில் Index ஆகியிருக்கும்.

அடுமட்டுமல்லாமல், பிரபலமான திரட்டிகளில் நீங்கள் இணைத்த பதிவுகளின் இணைப்புகள், நண்பர்கள் அவர்களுடைய தளத்தில் உங்களது வலைப்பதிவிற்கு கொடுத்த இணைப்புகள் என அனைத்தும் அங்கங்கே பதியப்படிருக்கும். இவ்வாறான இணைப்புகளை Backlinks என்று அழைப்பார்கள்.

இவ்வாறு உங்களுடைய டொமைன் பெயரிலிருக்கும் நூற்றுக்கணக்கான (சில நேரங்களில் ஆயிரக்கணக்கில் கூட இருக்கும். அந்தந்த தளங்களின் தன்மையைப் பொறுத்தது.) பேக்லிங்ஸ் அனைத்தும் அங்கங்கே இருக்கும்.

இந்த பேக் லிங்ககளை அழுத்தி, உங்கள் வலைத்தளங்களுக்கு வாசகர்கள் வருகை தருவார்கள். அவ்வாறான இணைப்புகளை, உங்களது டொமைன் எக்ஸ்பயர் ஆன பிறகு அழுத்தினால், புதியதாக உங்களது டொமைனை வாங்கியவர்களின் தளங்களுக்கு அந்த வாசகர்கள் சென்றுவிடுவார்கள்.

இந்த பேக்லிங்ஸ்களுக்காகவும், உங்களுடைய ஒருவருட கால உழைப்பின் பெரும் பகுதியை, உங்களது டொமைனை வாங்குவதன் மூலம் அவர்கள் பெறுகிறார்கள். இதனால் அவர்களது தளங்கள் வெகு விரைவில் பிரபலமடைய வாய்ப்புள்ளது.மாற்று வழி உள்ளதா?

எக்ஸ்பயர் ஆன டொமைன்ப பெறுவதற்கு மாற்று வழி உண்டா என்றால் அரிதான சில வழிகள் உள்ளன.

முதல் வழி காலவதியான டொமைனை சிறிது காலம் சில நிறுவனங்கள் அப்படியே வைத்திருக்கும். அவற்றைப் புதுபிக்க பத்து மடங்கு தொகையை கேட்பார்கள். உதாரணமாக ஒரு டொமைனை புதுபிக்க 600 ரூபாய் என்றால், உங்களது காலவதியான டொமைனை புதுப்பிக்க 6000 ரூபாய் கட்டச் சொல்வார்கள். (ஒரு சில நிறுவனங்களில் மட்டும் இந்த முறை செயல்படுத்தபடுகிறது)

பெரும்பாலான நிறுவனங்கள், அவர்களே கூட எக்ஸ்பயர் ஆகும் டொமைனின் வேல்யூ – பாப்புலாரிட்டியைப் பொறுத்து, மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அல்லது கண்கொத்திப் பாம்புபோல காத்திருக்கும் டொமைன் திருடர்கள் அதை வாங்கி, தங்களுடைய வலைத்தளங்களுக்கு, அல்லது வியாபார நோக்கம் கொண்ட நிறுவனத் வலைத்தளங்களுக்கு பயன்படும் வகையில் அதை Redirect செய்துவிடுவார்கள்.

அவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய தளத்திற்கு வர நினைத்து உங்களுடைய டொமைன் பெயரில் உள்ள இணைப்புகளை அழுத்தும்பொழுது தானாகவே, அவர்கள் உங்களது டொமைன் பெயரில் உருவாக்கி வைத்திருக்கும் வலைத்தளங்களுக்குச் சென்றுவிடும்.

உதாரணமாக ஒரு நாளைக்கு 500 பேர் உங்களது தளத்திற்கு வருவார்களெனில் அந்த இணைப்பின் மூலம் வருபவர்கள் கணிசமாக அவர்களுடைய தளத்திற்கு செல்வார்கள். இதனால் அவர்களின் தற்போதைய தளம் பிரபலமடைய வாய்ப்பு ஏற்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply