உங்கள் 2 வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கிறீர்களா | Tamil Serial Today Org

உங்கள் 2 வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கிறீர்களா

Loading...

உங்கள் 2 வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கிறீர்களாஇரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள ரச்சல் கூஸ் தலைமையிலான குழுவினர், சிறு வயது உடல் பருமன் குறித்து 6,750 குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டார். அதன் விவரம்:

ஆய்வில் பங்கேற்றவர்களில் 5ல் 1 குழந்தை 2 வயதான பிறகும் பாட்டிலில் பால் குடிப்பதும், இப்படி நீண்ட காலம் புட்டி பால் குடிப்பவர்களில் 5ல் ஒரு குழந்தையின் உடல் 5 வயதுக்குப் பிறகு பருமானாவதும் தெரியவந்தது. அதேநேரம், 1 வயதுக்குப் பிறகு பாட்டில் பழக்கத்தை கைவிட்ட 6ல் ஒரு குழந்தை மட்டுமே குண்டாவது உறுதி செய்யப்பட்டது.
நீண்ட காலம் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளில் 33 சதவீதம் பேருக்கு உடல் பருமனாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, 2 வயதுக்கு முன்பாக பாட்டில் பழக்கத்தை நிறுத்தி விடுவது நல்லது

Loading...
Rates : 0
VTST BN