உங்கள் முடியின் முனையில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க சில டிப்ஸ்

Loading...

உங்கள் முடியின் முனையில் ஏற்படும் வெடிப்பைத் தடுக்க சில டிப்ஸ்சிலருக்கு முடியின் நுனியைப் பார்த்தால் இரண்டாக பிளந்திருக்கும். அப்படி முடியானது இரண்டாக பிளந்திருந்தால், முடி வளராது. இப்படி முடி பிளப்பதற்கு அதிகப்படியான அளவில் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவது ஒரு முக்கிய காரணம்.

அதுமட்டுமின்றி, முடி வெடிப்பு ஏற்படுவதற்கு ஒருசில பழக்கவழக்கங்களும் காரணமாகும். அப்பழக்கங்களை மாற்றிக் கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் முடி வெடிப்பு முடியின் அழகையே கெடுக்கும்.

சரி, இப்போது முடி வெடிப்பைத் தடுக்கும் சில சிம்பிளான வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!


தினமும் தலைக்கு குளிக்காதீர்கள் :

தினமும் தலைக்கு குளிக்காமல், வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.

அளவுக்கு அதிகமாக தலையை அலசினால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் நீங்கி, அதனால் முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.


ஷாம்புவின் லேபிளை கவனிக்கவும் :

ஷாம்பு வாங்கும் போது, அதன் லேபிளை கவனிக்க வேண்டியது அவசியம். அப்படி கவனிக்கும் போது, அதில் சோடியம் லாரில் சல்பேட் இருந்தால், அவற்றை வாங்க வேண்டாம். ஏனெனில் அவை முடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

எனவே சோடியம் லாரில் சல்பேட் இல்லாத ஷாம்புவைப் பார்த்து வாங்கி பயன்படுத்துங்கள்.


கண்டிஷனர் பயன்படுத்துங்கள் :

எப்போதும் தலைக்கு குளிக்கும் போது முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். ஏனெனில் இவை முடியை மென்மையாக வைக்க உதவுவதோடு, முடி வெடிப்பு ஏற்படுவதையும் தடுக்கும்.


ஹேர் ட்ரையரை தவிர்க்கவும் :

ஸ்கால்ப்பில் அளவுக்கு அதிகமான வெப்பம் படும் போது, அவை முடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

எனவே தலைக்கு குளித்த பின், ஹேர் ட்ரையர் பயன்படுத்தி முடியை உலர வைக்காமல், இயற்கையாக உலர வைத்து பழகுங்கள். இதன் மூலம் முடி வெடிப்பைத் தவிர்க்கலாம்.


ஹேர் ஸ்ட்ரைட்னிங்கை தவிர்க்கவும் :

சிலர் ஹேர் ஸ்டைல் செய்கிறேன் என்று ஹேர் ஸ்ட்ரைட்னிங் மற்றும் கர்லிங் செய்து கொள்வார்கள்.

இப்படி செய்து வந்தால், முடி தனது வலிமையை இழந்துவிடுவதோடு, முடி வெடிப்பும் ஏற்படும். ஆகவே இவற்றை தவிர்க்க வேண்டும்.


ஈரமான முடியை சீவ வேண்டாம் :

முடி ஈரமாக இருக்கும் போது சீவுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் முடி உதிர்வது அதிகரிப்பதோடு, முடி வெடிப்பும் அதிகரிக்கும்.

எப்போதுமே முடி நன்கு உலர்ந்த பின் தான் சீப்பை பயன்படுத்த வேண்டும்.


அவ்வப்போது முடியை வெட்டவும் :

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும். இதனால் முடி வெடிப்பினால் முடியின் வளர்ச்சி தடுக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.


கலரிங்கை தவிர்க்கவும் :

தற்போது கலரிங் செய்வோர் அதிகம் உள்ளனர். அப்படி செய்யப்படும் கலரிங்கில் அம்மோனியா மற்றும் பெராக்ஸைடு போன்ற கெமிக்கல்கள் இருப்பதால், அவை முடியின் புரோட்டினை பாதித்து, முடி வெடிப்பு, வறட்சி போன்றவை ஏற்படக்கூடும். ஆகவே இதனை தவிர்க்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply