உங்கள் உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்

Loading...

உங்கள் உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்நம் முகத்தில் அழகை வெளிப்படுத்துவதில் உதடுகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நாம் அனைவருக்கும் மிகவும் மென்மையான அழகான உதடுகள் வேண்டும் என்பது ஆசை. ஆனால் பலருக்கு உதடுகள் அடிக்கடி வறண்டு, பொலிவிழந்துவிடுகிறது. இதற்கு காலநிலை மற்றும் நாம் குடிக்கும் சூடான டீ மற்றும் காபியும் சில காரணங்களாகும்.

சூடான பானங்கள், மற்றும் உணவுப்பொருட்கள் உதடுகளின் ஈரத்தன்மையை போக்கி, உதடுகளை மென்மையிழக்கச் செய்கின்றன. இதனால் உதடுகள் நிறமாற்றம் பெருகின்றன.

உதட்டின் வறட்சியை போக்க அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதும் அந்த சமயத்தில் உதடுகளின் வறட்சியை போக்கினாலும் வெகுவிரைவில் வறட்சியடையச் செய்து, மேலும் அதிகரிக்கச் செய்து விடும். இந்த உதடு வறட்சியை போக்க நாம் லிப் பாம்களை, மற்றும் சில மருந்துக்களை எடுத்துகொண்டாலும், நம் அன்றாட பயண்பாட்டிலுள்ள பொருட்களிலேயே இதன் அது நிரந்தர தீர்வுகள் சில ஒளிந்துள்ளன. உங்கள் உதடுகளை மென்மையாக்கி உங்கள் அழகை மெருகேற்ற சில வழிமுறைகள் இதோ…


தயிர் :

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் ஏற்கனவே எண்ணெய் பசை மற்றும் புரோட்டீன் சத்து நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் மாற்ற உதவும்.


கற்றாழை :

கற்றாழை அன்றாடம் பயண்படாவிடிலும், எளிதில் கிடைக்கும் ஒன்று தான். கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை இளஞ்சிவப்பாக மாற்றும்.


தேன் :

தேனில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.


ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளின் வறட்சி நீங்கி ஈரப்பதம் தங்கும்.


வெள்ளெரிக்காய்:

கண்களுக்கு வைப்பது போல், வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் மீட்டு தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply