இருமல் வலிப்பு நோயால் அவதியா அப்போ இதோ விடுதலை பெற சிறந்த வழி முறை

Loading...

இருமல் வலிப்பு நோயால் அவதியா  அப்போ இதோ விடுதலை பெற சிறந்த வழி முறைசங்கிலை மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். புதர் காடுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரைளிலும், கடற்கரைகளிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. பின் காங்கோ, சோமாலியாவில் பரவிற்று, பின் மடகாஸ்கர், இந்தியாவில் பரவிற்று. இது 8 மீட்டர் வரை வளர்ந்து படரக்கூடியது.

இதன் இலைகள் பளபளப்பானவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். கூரைமாயான நுனிகளையுடையது. சங்கிலை சிறுநீர்ப் பெருக்கியாகவும், இலை உடல் பலம் பெருக்கியாகவும், வேர் கோழையகற்றும், இருமல் தணிக்கும், ஆஸ்த்துமா, சர்க்கரை வியாதி போக்கும் மருந்தாகவும் செயற்படும். சங்கிலை, தூதுவேளை இரண்டும் ஒரு பிடி அரைத்து நெல்லிக்காயளவு பசும்பாலில் உட்கொண்டு வந்தால் கபரோகம் தீரும்.

சங்கிலை, வேப்பிலை, சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வர ஜன்னி, இழுப்பு வராமல் தடுக்கும். சங்கிலை, வேர்பட்டை சமனளவு அரைத்து சுண்டைக்காயளவு வெந்தீரில் காலை, மாலைகளில் எடுக்க 20 நாள்களில் ஆரம்பப் பாரிச வாதம் வாயு, குடைச்சல் பக்கவாதம் தீரும்.

சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வாத வீக்கம், வலி, நீர் ஏற்றம், வாயு தீரும். சங்கம் வேர்பட்டைச்சாறு 20 மி.லி. 100 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் குடித்து வர சிறு நீர்த்தடை தீங்கும். அரிசி மாவுடன் ஒரு கட்டு சங்கிலை, நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின் ஒரு டம்ளர் காலை மாலை குடிக்க இருமல் குணமாகும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply